உயிரே...!
என்னை மட்டும் அல்ல-நீ
உன்னையும் சேர்த்து தான்
ஏமாற்றிக் கொண்டிருக்கிறாய்...
என்னைக் காதலிக்கவில்லை
என்று சொல்லுவதால்...
அன்பே...!
குழந்தை முகமடா உனக்கு
அதை நம்பினேன் நான்
எப்படி முடிந்தது
என்னை ஏமாற்ற...?
உயிரே.....!
என் மனதிற்கு
என் மீது கோபமாம்.....
என்னை நினைப்பதை விடுத்து
உன்னையே நிதமும் நான் நினைப்பதால்......
நீ...!
நினைவில்
தீயாய் நீ...
உருகுகிறேன் நான்
மெழுகாய்....!
அன்பே...!
நுரைப் புன்னகையைக்
கரையிடம் தொலைத்த அலைபோல்
உன்னிடம் என் இதயத்தைத்
தொலைத்து விட்டேனடா நான்.....
யாரின் தவறு...?
உன்னைப் பார்த்தது
என் கண்களின் தவறா...?
உன்னிடம் மயங்கியது
என் இதயத்தின் தவறா...?
உன்னையே நினைத்தது
என் மூளையின் தவறா...?
உன் சிரிப்பில் என்னைத் தொலைத்தது
என் மனதின் தவறா...?
உன்னைக் காதலித்தது
என் இதயத்தின் தவறா...?
உன்னிடம் என் மனதை சொன்னது
என் இதழ்களின் தவறா...?
நீ மறுத்தது
விதியின் தவறா...?
நாம் பிரிந்தது
காலத்தின் தவறா...?
உனக்காக கண்ணீர் சிந்துவது
என் கண்களின் தவறா...?
காதலனே...!
வாழ்வில் முதல் முறை
உன்னக்காக
என் கண்ணீர் சுரப்பிகள்
தங்கள் வேலையைச்
சரியாகச் செய்கின்றன!!!
கண்ணா....!
உன் நினைவால்
வரும் போது
கண்ணீர் கூட
தித்திக்கிறது!
என் அன்பே....!
உயிரோடு
இறந்து விட்டேன் நான்
நீ "மறந்துவிடு" என்று
சொன்ன வார்த்தையால்......
நீ....!
என் கவிதையின்
முதல் வரி நீ...
என் கண்ணீரின்
முதல்த் துளி நீ...
என் வாழ்வின்
முதல் அர்த்தம் நீ...
என் உயிரின்
முதல்த் துடிப்பு நீ...
Love & Friendship
காதல்
கண்ணீரை
வர வைக்கும்
இனிய உணர்வு...
நட்பு
வரும் கண்ணீரைத்
துடைக்கும்
அழகிய உறவு....
நட்பு
காரணம் இல்லாமல் கலைந்து போக
இது கனவும் இல்லை.....
காரணம் சொல்லி பிரிந்துபோக
அது காதலும் இல்லை
உயிர் உள்ளவரை இருக்கும்
நமது நட்பு அது
நீ...!
காலைப் பனியின்
துளிகளில் நீ...
மாலைச் சூரியனின்
கதிர்களில் நீ...
கடலில் கலக்கும்
வானத்தில் நீ...
கண்ணிலிருந்து பிரியும்
கண்ணீரில் நீ...
உயிரை எடுக்கும்
விஷத்தில் நீ...
உயிர் கொடுக்கும்
அமுதத்தில் நீ...
இதயத்தில் எழும்
இசையில் நீ...
காதில் கேட்கும்
பாடலில் நீ...
அன்பே...!
குழந்தை முகமடா உனக்கு
அதை நம்பினேன் நான்
எப்படி முடிந்தது
என்னை ஏமாற்ற...?
மாலை நேர தாஜ்மஹால்......!
ரத்தக் குளியல்
நடத்துகிறது தாஜ்மஹால்.......
மாலைச் சூரியனின்
கதிர் கொண்டு.......
உயிரே.....!
என் மனதிற்கு
என் மீது கோபமாம்.....
என்னை நினைப்பதை விடுத்து
உன்னையே நிதமும் நான் நினைப்பதால்......
நட்பு
காரணம் இல்லாமல் கலைந்து போக
இது கனவும் இல்லை.....
காரணம் சொல்லி பிரிந்துபோக
அது காதலும் இல்லை
உயிர் உள்ளவரை இருக்கும்
நமது நட்பு அது
மாலை நேர தாஜ்மஹால்......!
ரத்தக் குளியல்
நடத்துகிறது தாஜ்மஹால்.......
மாலைச் சூரியனின்
கதிர் கொண்டு.......
உயிரை பிழியும்
உந்தன் நினைவு
உனக்கு தெரியுமா?
ஊமை ஆனேன்
உன்னால் தானே
உணர முடியுமா?
இருக்கும் வரைக்கும்
இல்லை என்று
சொல்ல விருப்பமா?
இழந்து விட்டால்
திருப்பி பெற
இதயம் கிடைக்குமா??
இங்கே இன்பம்
இருக்குமா சொல்
இரும்பும் பேசுமா????
|